இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்த ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் திகதி 900,000 ஐத் தாண்டியுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை,, இந்த ஆண்டு இதுவரை 900,708 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர், இது 2022 ஆம் ஆண்டு முழுவதுமாக பதிவான 719,978 மொத்த வருகைகளுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.
இலங்கையின் சுற்றுலாத் துறையானது 2023 ஆம் ஆண்டில் 2 மில்லியன் பார்வையாளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இலங்கையின் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சுற்றுலாத்துறையானது, கோவிட்-19 தொற்று மற்றும் தெற்காசிய நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்த்தக்கது.