வட அமெரிக்கா

கனடாவில் அறிமுகமாகவுள்ள முச்சக்கர வண்டிகள்…

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மூச்சக்கர வண்டிகளை அறிமுகம் செய்வது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மூன்று சக்கரங்களை உடைய சிறிய வாகனங்களை பரீட்சார்த்த அடிப்படையில் முக்கிய நகரங்களில் சோதனையிடத் திட்டமிட்டுள்ளது.முச்சக்கர வண்டிகளுக்கு அனுமதி அளிப்பதற்காக சட்டங்களில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.2023ம் ஆண்டுக்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் இந்த விடயம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழலுக்கு பாதகம் இல்லாத மற்றும் மலிவான போக்குவரத்து வாய்ப்புகள் குறித்து வரவு செலவு திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.இதன்படி சிறிய ரக வாகனங்களை வீதியில் அறிமுகம் படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

கனடாவில் அறிமுகமாகும் முச்சக்கர வண்டிகள் | Ontario May Allow Three Wheeled Vehicles

UMV எனப்படும் Urban Mobility Vehicles என்ற வாகனத்தையே நகர நிர்வாகம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.இது ஓர் இலத்திரனியல் முச்சக்கர வண்டி என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகபட்சமாக  மணிக்கு 32 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க கூடிய இந்த வாகனம் ஒரு இருக்கையை மட்டும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.எனினும், சிறிய ரக வாகனத்தை அறிமுகம் செய்வது தொடர்பில் பல்வேறு மாற்று கருத்துக்கள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 14 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்