தீவிர வலதுசாரிகளுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் !
பிரெஞ்சு பாராளுமன்றத்திற்கு வரவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக தீவிர வலதுசாரி தேசிய பேரணிக்கு (RN) எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாரிஸ் மற்றும் பிரான்ஸ் முழுவதும் உள்ள நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Marseille, Toulouse, Lyon மற்றும் Lille உள்ளிட்ட நகரங்களில் குறைந்தது 150 அணிவகுப்புக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
100,000 பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பாரிஸில், 1200 GMT மணிக்கு கிழக்கில் உள்ள ப்ளேஸ் டி லா ரிபப்ளிக்கில் இருந்து பாஸ்டில் சதுக்கம் வழியாக நேஷனுக்கு அணிவகுப்பு புறப்படும்.
50,000 இல் இருந்து 100,000 வரையான ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகரில் எதிர்பார்க்கப்பட்டுள்ளனர். தீவிர வலதுசாரிக்கட்சியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், வன்முறைச் சம்பவங்கள் பதிவாகலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
21,000 காவல்துறையினர் 45 குழுக்களாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பரிஸ் தவிர்த்து, மார்செ, லியோன், ரென் போன்ற நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் எதிர்பார்க்கப்பட்டுள்ளன. மொத்தமாக 350,000 பேர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.