கிரீஸில் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேற்றப்படும் ஆயிரக்கணக்கான மக்கள்
கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகருக்கு வடக்கே ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
25 மீற்றர் வரை தீ பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வர்ணவாஸ் நகரில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் எரிகின்றன, மேலும் அந்த பகுதியை விட்டு வெளியேற முயன்ற சுமார் 25 வாகனங்களில் சிக்கிக் கொண்ட ஒரு குழுவை தீயணைப்பு வீரர்கள் விடுவித்துள்ளனர்.
வர்ணவாஸ் நகரில் நேற்று மதியம் ஏற்பட்ட காட்டுத் தீயினால் இரவோடு இரவாக 100 சதுர கிலோமீற்றர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது கிரீஸில் வீசும் அதிக வெப்பமும், பலத்த காற்றும் தீ பரவுவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
(Visited 5 times, 1 visits today)