ஜெர்மனியில் குடும்ப வன்முறையில் ஈடுபட்ட நபருக்கு நேர்ந்த கதி
ஜெர்மனியில் நபர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
போடன்புட்டன் மாநிலத்தில் ஒவ்ஃபன் என்ற நகரத்தில் உள்ள ஓவர்கியேஷன் என்ற பிரதேசத்தில் 39 வயது நபர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தனது வீட்டில் குடும்ப வன்முறையில் ஈடுபடுவதற்கு முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து அயலவர்கள் பொலிஸாருடைய உதவியை நாடியுள்ளது.
உடனடியாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் 39 வயதுடைய நபர் பொலிஸார் மீது கத்தி குத்து தாக்குதல் சம்பவம் ஒன்றை மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.
அதற்கமைய, பொலிஸார் தற்பாதுகாப்புக்காக இந்த நபர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை துப்பாக்கி தாக்குதலுக்கு பின் அவரை அவசர பிரிவில் அனுமதித்ததாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணைகள் மேற்கொண்டதில் 39 வயதுடைய நபர் மனோவியல் ரீதியில் பாதிக்கப்பட்டவராகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.