இங்கிலாந்து அணியை கதறவிட்ட இலங்கையில் குட்டி வீராங்கனை
19 வயதுக்குட்பட்ட முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இன்று (09) இலங்கை பெண்கள் அணி 108 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவு செய்ய முடிந்தது.
இந்த போட்டியில் 14 வயதான சாமோதி பிரபோதா 42 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் பெற்றார்.
காலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48 ஓவர்கள் 4 பந்துகளில் 226 ஓட்டங்களைப் பெற்றது.
227 என் இலக்கை துரத்த களம் இறங்கிய இங்கிலாந்து அணியினருக்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் கடும் அழுத்தத்தை கொடுத்தனர்.
அதன்படி இங்கிலாந்து அணியால் 23 ஓவர்கள் 3 பந்துகளில் 118 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அதன்படி, இலங்கை அணி 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
(Visited 5 times, 1 visits today)