இலங்கையில் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று நண்பகல் 12.00 மணி நிலவரப்படி 14 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் 09 பேரும், புத்தளம் மாவட்டத்தில் இருவர், பதுளை, திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர் என DMC தெரிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் 02 பேர் காணாமல் போயுள்ளதாகவும், பல்வேறு அனர்த்த சம்பவங்களினால் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
இன்று நண்பகல் 12.00 மணி நிலவரப்படி, இலங்கையின் 24 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 132,289 குடும்பங்களைச் சேர்ந்த 442,185 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
12,334 பேரில் 38,594 பேர் தற்போது 341 பாதுகாப்பு முகாம்களிலும், 45,415 குடும்பங்களைச் சேர்ந்த 115,628 பேர் உறவினர் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று DMC கூறுகிறது.