சிங்கப்பூரில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள மூட்டைப்பூச்சி
சிங்கப்பூரில் மூட்டைப்பூச்சிப் பிரச்சினை கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
விடுமுறைக் காலத்துக்குப் பிறகு வழக்கமாக இருப்பதைவிட இம்முறை 30 சதவீதம் அதிகரிக்கக்கூடும்.
பெரிய பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள் அவ்வாறு முன்னுரைத்துள்ளன. அதிகமானோர் வெளிநாடுகளுக்குச் சென்று வருவதால், மூட்டைப்பூச்சிச் சம்பவங்கள் வழக்கத்துக்கு மாறாகக் கூடுதலாய்ப் பதிவாகியுள்ளன.
ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் தென் கொரியாவிலும், மூட்டைப்பூச்சிப் பிரச்சினை பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
இருண்ட பகுதிகள், மெத்தையின் மடிப்புகள், இதுபோன்ற இடங்களில் மூட்டைப்பூச்சிகளைக் கண்டுபிடிக்கலாம்.
ஐரோப்பாவில் ஏற்பட்ட பிரச்சினைக்குப் பிறகு இவற்றைப் பற்றி எல்லாரும் எச்சரிக்கையாகவே இருக்கின்றனர்.
ஆனால் மூட்டைப்பூச்சிப் பிரச்சினையிலிருந்து எந்தவொரு நாடும் தப்பித்துவிட முடியாது என்கின்றன பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள்.