கொழும்பில் வீடு ஒன்றின் மாத வாடகை 1000 ரூபாய் : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும்!
பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள மெதிவெல பாராளுமன்ற உறுப்பினர் உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் வீடொன்றின் மாதாந்த வாடகை 1000 ரூபா என தெரியவந்துள்ளது.
சுமார் 30 ஆண்டுகளாக இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் வாடகைக் கட்டணத்தில் திருத்தங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் அறிக்கை காட்டுகிறது.
1993 மே 28ம் திகதியில் இருந்து வீட்டு வாடகை வசூலிக்கப்பட்டதும் தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
மேலும் அந்த குடியிருப்புகளில் நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணங்களுக்கு வைப்புத்தொகை வசூலிக்கப்படுவதாகவும் 1000 ரூபா சரியான நேரத்தில் திருத்தப்படவில்லை என்றும் அறிக்கை வெளிப்படுத்துகிறது.
(Visited 5 times, 1 visits today)