Site icon Tamil News

கிழக்கின் கொலைக்களம்..!!!

பைபிளில் ஒருவாக்கியம் இருக்கிறதாக குறிப்பிடுவார்கள் வாள் எடுத்தவன் வாளாலே சாவான். சிலப்பதிகாரம் கூறுவது ஊழ்வினை தானுற்றக்கடை வழி உறுத்தும் பட்டினத்தார் தன்வினை தன்னைச்சுடும். இந்த வாக்கியங்களின் அதிர்வுதான் முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திர காந்தனுக்கு வந்திருக்கிறதோ என்னவோ !

பிள்ளையானை முதலமைச்சர் (2008 – 2012) ஆக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டாராம். “நான் குழந்தைப்புலியை முதலமைச்சர் ஆக்கியிருக்கிறேன்” தற்போது சனல் 4 காணொளியோடு பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் நாலா திசையிலிருந்தும் வெளி வந்து கொண்டிருக்கிறன. அதில் ஒன்றுதான் கிழக்கு மாகாணத்தில் ஒட்டுக்கழுக்களாக செயற்பட்டு பாவ இரக்கம் பார்க்காமல் ஈவிரக்கமின்றி செய்யப்பட்ட படு கொலைகள்.

குறிப்பிட்ட காலத்தில் கிழக்கில் இடம் பெற்ற படுகொலைகளின் சூத்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படாத போதும் தற்போது பட்டகாலில் படும் என்பதுபோல் வெளிக்கொண்டுவரப்படும் பல உண்மைகள் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறதாக பேசப்படுகிறது.

கிழக்கில் இயங்கி வந்த ஒரு அமைப்பு அல்லது குழு செய்த படு கொலைகளை பட்டியல் இட்டு தற்போது வெளியிட்டுள்ளது ஒரு தனியார் புலன்பிரிவு அக்கொலையாவன.

1. திருகோணமலை புனிதமரியாள் கல்லூரி மாணவி வர்ஸா படு கொலை.
2. ஊடகவியலாளர் சிவராம் படுகொலை
3. ஊடக வியலாளர் நடேசன் படுகொலை
4. வங்கியாளர் திருமலை விக்னேஸ்வரன் படுகொலை
5. யாழ் மாவாட்ட பாராளமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை
6. கிழக்கு பல’கலைக்கழக உபவேந்தர் ரவீந்தர நாத் கொலை
7. ஊடகவியலாளர் லசந்த படுகொலை
8. கொழும்பு வர்த்தகர் பாலா படுகொலை
9. சர்வதேச செஞ்சிலுவைச்சங்க உறுப்பினர் இருவர் கொலை
10. மட் பாராளுமன்ற உறுப’பினர் ஜோசப் பரராஜ சிங்கம் படு கொலை
11. மற்றும் 150 பேருக்கு மேற்பட்டவர்கள’ கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என பட்டியல் தெரிவிக்கிறது.

இதில் பச்சை பாலகி (சிறுமி) திருகோணமலை வர்ஸா படு கொலை பற்றியே அதிகமாக எடுத்துப்பேசப்படுகிறது. திருகோணமலை பாலையூற்று கிராமத்தை சேர்ந்த பெற்றோரான ரெஜி கிருபராணி தம்பதிகளின் புதல்விதான் 2009 ஆண்டு படு கொலை செய்யப்பட்ட வர்ஸா. இவர்களிடம் பெருந்தொகையான பணம் கப்பமாக கேட்கப்பட்டு அது கிடைக்கவில்லை என்பதற்காக திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு (வயது 6) படித்துக்கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டு படு கொலை செய்யப்பட்டாள்.

இச்சம்பவம் நடந்து 14 வருடங்கள் ஆகிவிட்டன.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக இலங்கை அரசு விழாக்கொண்டாடும் 2009 ஆம் ஆண்டு மார்ச்மாதம் 11 ஆம் அதிகதி (11.3.2009) இந்தக் கொடூரம் இடம் பெற்றிருக்கிறது. படு கொலை செய்யப்பட்டு உடல் கூறு கூறாக வெட்டப்பட்டு சாக்கொன்றில் மூட்டையாக கட்டப்பட்டு வீதி யோரக்கானில் எறியப்பட்ட நிலையில் மூன்று நாட்களுக்குப்பின் அந்த பச்சைக்குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பாலையூற்றிலுள்ள வர்ஸா வீட்டுக்கு கணனியில் நிபுணத்துவம் கொண்ட இளைஞர் ஒருவர் தினந்தோறும் சென்று அக்குடும்பத்தாருடன் அன்னியோன்யமாக பழகியுள்ளார். வர்ஸசாவின் தந்தையார் வெளிநாட்டில் பணி புரிந்து கொண்டிருந்ததால் சொத்து சுகம் உள்ளவர் என்ற எதிர் பார்ப்போடு தன்னிடம் உள்ள கணனி அறிவை சாட்டாக வைத்து பழகியுள்ளார். கணனி வீடு தோறும் வர தொடங்கிய காலம். இணையத்தை லாவகமாக கையாளும் திறன் கொண்டவராக காணப்பட்டவர்தான் குறித்த நபர்.

வர்ஸாவை நகரத்திலுள்ள சிறந்த பாடசாலையான திருகோணமலை புனிதமரியாள் கல்லூரியல் பெற்றோர் சேர்த்திருந்த நிலையில் அவள் தினந்தோறும் பாடசாலைக்கு ஆட்டோவில் சென்று வந்திருக்கிறாள். சம்பவம் நடந்த தினம் ஆட்டோ காலதாமதமாகியுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி கல்லூரியிலிருந்து சிறுமியை அழைத்து செல்ல முற்பட்டிருக்கிறார். குறித்த நபர். பொறுப்பாக இருந்த ஆசிரியை கறித்த நபரோடு பிள்ளையை அனுப்ப மறுத்துள்ளார்.

வர்ஸா குறித்த நபரைக் கண்டவுடன் இந்த மாமாவை எனக்கு நன்றாக தெரியும் இவர் வீட:;டுக்கு வரும் கம்பியூட்டர் மாமா என அறி முகப்படுத்தியதால் அவருடன் செல்ல ஆசிரியை அனுமதித்துள்ளார். ஆசிரியர்களுக்கோ அதிபருக்கோ தெரியாது ஒரு படுபாதகச் செயல் நடக்கப்போகிறதென்று.

காலதாமதமாக வந்த தயார் தன் குழந்தையை தேடியிருக்கிறார் . அவர் இல்லை என்று தயாருக்கு தெரிவிக்கப்பட்டதுடன் மாமா என்ற ஒருவர் அழைத்து சென்றுவிட்டார் என நிர்வாகம் தெரிவித்தபொது தயார் அதிர்ச்சி அடைந்து சிறுமியை அங்கும் இங்கும் தேடியிருக்கிறார் சிறுமி கிடைக்கவில்லை. தாயார் குழம்பிப்போன நிலையில் பொலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நேரமும் நாளும் ஓடிக்கொண்டிருந்த நிலையில் பாலையூற்று கிராமமும் பாடசாலை வளாகமும் கதி கலங்கிப்போன நிலையில் அனாமதேய தொலைபேசி அழைப்பொன்று தாயாருக்கு வந்துள்ளது,. தொலை பேசியின் மூலம். சினிமா பாணியில் குறிப்பிட்ட தொகை வர்ஸாவிடம் கப்பம் கேட்கப்பட்டிருக்கிறது. பணம் தராவிட்டால் பிள்ளையை கொல்லப்போவதாக கடத்திய குழு தயாரை மிரட்டியுள்ளது.

இதற்கிடையில் வெளிநாட்டிலுள்ள தந்தையாருக்கு தகவல் நேரத்துககு நேரம் அறிவிக்கப்பட்டது. தாயார் அவ்வளவு தொகை பணம் தம்மிடம் இல்லை என்றும் பிள்ளையை விடுவிக்கும்படி மன்றாடியுள்ளார். 50 லட்சம் ரூபா தருவதாகவும், தாய் உடன்பட்டுள்ளார். விடுவிப்போம் விடுவிப்போம் என தாயார் அலைக்கழிக்கப்பட்டாரே தவிர பிள்ளை மூன்று நாட்களாகியும் விடு விக்கப்படவில்லை.

நிலமையை புரிந்து கொண்ட பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினார்கள் அது பலனளிக்கவில்லை. சிறுமியை கடத்திவைத்திருந்த குறித்த ஒட்டுக்குழு கட்சியின் ஆதரவாளரான மாமா தன்னை அடையாளப்படுத்தி சிறுமியை கடத்திய நபர் சிறுமியை கிழுக்கு மாகணத்தில் பிரபல அமைப்பாக செயற்பட்ட குழுவிடம் ஒப்படைத்துள்ளார். குழுவை சேர்ந்த ஆறுபேர் சிறுமியை பாரம் எடுத்து ஒழித்து வைத்துள்ளனர்.

ஒழித்து வைக்கப்பட்ட இடம் கட்சியின் வதை முகாமென்று சொல்லப்பட்டது. வர்ஸா தன்னை விடும்படி அடம்பிடிக்கவே துணியினால் வாயை அடைத்து கைகால் கட்டப்பட்டு பிளாஷ்ர ரால் வாய் ஒட்டப்பட்டு வதை செய்த காரணத்தினால் மூச்சு திணறி சிறுமி இறந்துள்ளாள். இறந்து போன சிறுமியை கோரமாக கண்ட துண்டமாக வெட்டி. சாக்கில் அடைத்து புதிய சோனக தெருவிலுள்ள வாய்க்காலில் குப்பையோடு குப்பையாக போட்டுள்ளனர்.

சிறுமியை கொலை செய்த பின்பும் அக் கொலைகார கும்பல் வர்ஸாவின் தாயாரோடு தொடர்பு கொண்டு கப்பம் கேட்டுள்ளனர். சிறுமியின் சடலம் மூன்று நாட்கள் கானுக்குள் கிடந்த நிலையில் மூன்றாவது நாள் நகர சுத்தி தொழிலாளர்கள் அதை சுத்தம் செய்ய எடுத்தபோது கை ஒன்று தெரிந்த நிலையில் அத்தொழிலாளி பதறிப்போன நிலையில் பொலீசுக்கு தகவல் வழங்கப்பட்டது. பாடசாலை ஆசிரியர்களும் தாயாரும் சடலத்தை அடையாளம் காட்டியதைத் தொடர்ந்து நீதிபதி .இளஞ்செழியன் பிரேத பரீசொதனைக்கு உத்தரிவிட்டு குற்றவாளிகளை கைது செய்யும்படி உத்தரவிட்டதன்பேரில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

குற்றவாளிகளில் ஒருவர் தமிழ் கட்சியொன்றின் திருமலை மாவட்ட பொறுப்பாளாக இருந்தவர் என்றும் இரண்டாவது சந்தேக நபர் அவ்வாறு ஒரு கட்சியை சேர்ந்தவென்றும் ஏனைய மூவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டார்கள். அப்போது திருகோணமலை சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்ஷகராக கடமையாற்றியவர் வாஸ் குணவர்த்தன. இப்படுகொலையோடு சம்மந்தப்பட்ட அனைவரும் கிழக்கு மாகாணத்தின் பிரதான ஒட்டுக்குழவின் தலைவரிகன் சீழ் இயங்கியதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் வடை பெற்ற காலத்தில் ஊடக பேச்சாளாரக இருந்தவர் ஆசாத் மௌலானா என்று தெரிவிக்கப்பட்டது.

பொலீசார் தீவிர வேட்டை நடத்தியதன் காரணமாக குற்றவாளிகள் என தேடப்பட்டவர்கள் நான்குபேர் பிடிபட்டார்கள் கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் கைது செய்யப்பட்டு இரண்டொரு நாட்களில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிர்ச்சியான தகவல் வெளிவந்தது. அந்த தகவல் யாதெனில் ஒரு குற்றவாளி தப்பியோட முற்பட்டபோது தம்மால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் இரண்டாவது குற்றவாளி சயனட் அருந்தி தானே தற்கொலை செய்து கொண்டதாகவும் . ஏனைய இருவரும் பயங்கரவாதிகளுடன் இடம் பெற்ற துப்பாக்கி சமரில் கொல்லப்பட்டதாகவும் காவல்துறை நீதி மன்றுக்கு தெரிவித்தது.

இந்த படுகொலை செய்தவர்கள் சனல் 4 வெளிக்கொண்டு வந்திருக்கும் குற்றவாளிகள் என தெரிவித்து ஆசாத் மௌலான தெரிவித்திருக்கும் வாக்கு மூலத்தினால் கிழக்கு மாகாணத்தில் 2006 ஆம் ஆண்டுக்குப்பின் இடம் பெற்ற படு கொலைகளோடு மக்கள் தொடர்பு படுத்தி பேசும் விவகாரம் நாளுக்குநாள் விரிவு பட்டுக்கொண்டிருக்கிறது.

நன்றி – அக்னியன்

Exit mobile version