இருட்டறையில் பூட்டி வைத்து சிறுமி கூட்டுப் பலாத்காரம்…உறவினர்கள் மூவர் கைது !
பல ஆண்டுகளாக இருட்டறையில் பூட்டி வைத்து உறவினர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 15வயது சிறுமி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள அனாதை விடுதியில் 6 வயது சிறுமி சேர்க்கப்பட்டிருந்தார். அப்போது 70 வயதான அவரது தந்தை உறவுள்ள ஒருவர், தனது வீட்டில் வளர்ப்பதாக அந்த சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் உள்பட வீட்டில் இருந்த ஆண்கள் அந்த சிறுமியை பல ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் அவ்வீட்டில் இருந்த பெண்களும் அந்த சிறுமியை, இயற்கைக்கு மாறான பாலியல் உறவு கொண்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அவர்களே மருந்து மாத்திரைகளை வழங்கியுள்ளனர்.
தற்போது 15 வயதான அந்த சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்வது வீடியோ எடுத்து இருட்டறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். வீட்டில் நடப்பது குறித்த வெளியே சொன்னால் கொன்று விடுவதாக சிறுமியை மிரட்டியுள்ளனர். அத்துடன் அந்த சிறுமியை பட்டினி போட்டுத் துன்புறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் சிறுமி கூட்டுப் பலாத்காரம் செய்யப்படும் தகவல் சைல்டு லைன் அமைப்புக்கு தெரிய வந்தது. அந்த அமைப்பினர், வழக்கறிஞர் மற்றும் பொலிஸார் உதவியுடன் சிறுமியை நேற்று மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உட்பட 6 பேர் மீது கூட்டுப் பலாத்காரம் மற்றும் இயற்கைக்கு மாறான பாலியல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தை அதிர வைத்துள்ள இந்த வழக்கை மத்திய மண்டல கூடுதல் டிசிபி மனிஷா சிங் தற்போது விசாரித்து வருகிறார். மாவட்ட நன்னடத்தை அதிகாரி விகாஸ் சிங் கூறுகையில்,” சிறுமி வைக்கப்பட்டிருந்த அனாதை இல்லம் 2021-ம் ஆண்டில் மூடப்பட்டது. பெற்றோருடன் இருப்பவர்களை அனாதை இல்லத்தில் வைக்க முடியாததால், ஒரு சிலர் பெற்றோரிடம் திருப்பி அனுப்பப்பட்டனர். குழந்தைகளைத் தங்க வைப்பதற்கான நியாயமான காரணங்கள் இல்லாததால் அந்த அனாதை இல்லம் மூடப்பட்டது” என்று அவர் கூறினார். இந்த வழக்கில் தற்போது 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.