Site icon Tamil News

லிபியாவை புரட்டியெடுத்த வெள்ளம் – மீட்கப்பட்ட 1000க்கும் மேற்பட்ட உடல்கள் !

லிபியா நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1000க்கு மேற்பட்ட நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

வட ஆப்பிரிக்க நாடான லிபியாவை மத்திய தரைக்கடல் புயல் டேனியல் வலிமையாக தாக்கி அங்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.அதிலும் லிபியாவின் கிழக்கு பகுதியில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டு இருந்த Derna நகரம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ள பாதிப்பில் குறைந்தது 2000 பேர் உயிரிழந்து இருக்கலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தாலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எதன் அடிப்படையில் கூறப்படுகிறது என்பது தெளிவாக தெரியவில்லை.இந்நிலையில் வெள்ளத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ள டெர்னாவில் இருந்து இதுவரை 1000 உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாக கிழக்கு நிர்வாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் டெர்னாவில் 1000 உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் நகரில் இருந்த 25 சதவீத மக்கள் காணாமல் போய் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version