ஆசியா உலகம்

வானில் பறந்துக்கொண்டிருக்கும்போதே திறக்கப்பட்ட விமானத்தின் அவசர கதவு : பீதியடைந்த பயணிகள்!

விமானம் தரையிறங்குவதற்கு சற்று முன்பு ஏசியானா ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவைத் திறந்த பயணி ஒருவர் தென் கொரிய பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமானப் போக்குவரத்து பாதுகாப்புச் சட்டங்களை மீறியதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குறித்த பயணியை பொலிஸார் காவலில் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

South Korea detains passenger after Asiana plane door opened mid-air |  Reuters

image credits Reuters  news 

ஏர்பஸ் ஏ321-200 என்ற உள்நாட்டு விமானம் ஏறக்குறைய 200 பேருடன் தலைநகர் சியோலில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. இதன்போது 240 கிலோமீற்றர் தொலைவில் உள்ள டேகு சர்வதேச  விமான நிலையத்தில், தரையிறங்க தயாராகிக் கொண்டிருந்த போது மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

விமானம் தரையில் இருந்து சுமார் 200 மீ உயரத்தில் இருந்தபோது, அவசரகால வெளியேற்றத்தின் அருகே அமர்ந்திருந்த பயணி ஒருவர் “நெம்புகோலைத் தொட்டு கைமுறையாக கதவைத் திறந்தார் என தென் கொரிய   பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

விமானம் தரையிறங்கும் வரை சுமார் 10 நிமிடங்களுக்கு குறித்த கதவு திறந்திருந்ததாகவும், இதனால் பயணிகள் சிலர் பீதியடைந்ததாகவும், அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

See also  பாகிஸ்தானில் காவல்துறை மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல்

(Visited 15 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content