விளையாட்டு

T20 WC – 77 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி

9வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் இலங்கை – தென் ஆப்பிரிக்கா அணிகள் நியூயார்க்கில் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசங்கா – குசல் மெண்டீஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் 3 ஓவரில் வெறும் 13 ரன்களே எடுத்தது.

தொடர்ந்து தடுமாறி வந்த இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த வகையில் நிசங்கா 8 பந்தில் 3 ரன்களிலும், கமிண்டு மெண்டீஸ் 15 பந்தில் 11 ரன்களிலும், ஹசரங்கா 0, சதீரா 0, அசலங்கா 6, குசல் மெண்டீஸ் 19,தசுன் சனங்கா 9, பதிரனா 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனால் இலங்கை அணி 19.1 ஓவரில் 77 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிக பட்சமாக குசல் மெண்டீஸ் 19 ரன்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் அன்ரிச் நோர்ட்ஜே 4 விக்கெட்டும் ரபாடா, மகாராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content