சுவிட்சர்லாந்து தேர்தல்களில் சுவிஸ் மக்கள் கட்சி வெற்றி

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் எஸ்.வி.பி (SVP)எனப்படும் சுவிட்சர்லாந்து மக்கள் கட்சி வெற்றியீட்டியுள்ளது.
நாடாளுமன்றில் மொத்தமாக 62 ஆசனங்களை சுவிஸ் மக்கள் கட்சி பெற்றுக்கொண்டுள்ளது.
கடந்த தேர்தலை விடவும் இம்முறை ஒன்பது ஆசனங்கள் கூடுதலாக கைப்பற்றியுள்ளது.
சுவிஸ் சமூக ஜனநாயகக் கட்சி மொத்தமாக 41 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
மத்திய கட்சி 29 ஆசனங்களையும், அடிப்படை லிபரல் கட்சி 28 ஆசனங்களையும், பசுமைக் கட்சி 23 ஆசனங்களையும், லிபரல் பசுமைக் கட்சி 10 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளன.
செனட் சபைத் தேர்தலில் மத்திய கட்சி 10 ஆசனங்களையும், அடிப்படை லிபரல் கட்சி 9 ஆசனங்களையும், சமூக ஜனநாயகக் கட்சி 5 ஆசனங்களையும், சுவிஸ் மக்கள் கட்சி 4 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளன.
(Visited 12 times, 1 visits today)