இலங்கை : ரணிலை ஆதரித்தமையால் கட்சி பிளவுப்பட்டுள்ளது – நாமல்!
ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதன் மரபு பொதுஜன பெரமுனவின் பிளவை குறிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் இன்று (25.07) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்கினோம், அவர் எமக்கு ஒத்துக்கொள்ளாத விடயங்களைச் செய்தாலும், இன்றுவரை நாங்கள் எதுவும் கூறவில்லை.
எனினும், கட்சியாக எமக்குக் கிடைத்த பரிசு, கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. எனவே எதிர்காலத்தில் நாங்கள் ஒரு அரசியல் முடிவை எடுப்போம்.
நாங்கள் இன்னும் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி வருகிறோம். பொருத்தமான இடத்திற்கு வந்தால் ஒரு அரசாங்கத்தைப் பற்றி விவாதிக்க நாங்கள் தயார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள அனைவருடனும் ஆலோசித்து வருகிறோம். அதன் பிறகு இறுதி முடிவு எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.