இலங்கையில் இடம்பெறும் இணையவழி கடன் மோசடிகள் தொடர்பில் நடாளுமன்றத்தில் விசேட கவனம்!
இந்நாட்டில் இடம்பெற்று வரும் இணையவழி கடன் மோசடிகள் தொடர்பில் இன்று (12) பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
இணையவழிக் கடன் வழங்கல் மோசடிகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்றார்.
குறுகிய காலத்திற்கு நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களினால் பெரும்பாலும் ஆன்லைன் கடன்கள் வழங்கப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ குறிப்பாக இந்த செவ்வாய்கிழமையன்று இலங்கை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் முதல் வாசிப்புக்காக முன்வைக்கப்பட்டது.
நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை ஆணைய மசோதா முழு பாதுகாப்பையும் வழங்கவில்லை. ஆனால் தேவையான சட்டங்கள் விரைவில் கொண்டுவரப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.