ஸ்பெயின் – இத்தாலி பொலிஸாரிடம் சிக்கிய கும்பல் – விசாரணையில் வெளிவந்த தகவல்
ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் உள்ள பொலிசார் 11 பேரை கைது செய்து 5,000 லிட்டருக்கும் அதிகமான கலப்பட ஆலிவ் எண்ணெயை கைப்பற்றியுள்ளனர்.
சர்வதேச கும்பலை இந்த குழுவினர் மலிவான எண்ணெய்களை அதிக விலைக்கு சமமானதாக மாற்றி இலாபம் தேட முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சியுடாட் ரியல் பகுதியில் ஆலிவ் எண்ணெயை ஏற்றிச் சென்ற லொரியை ஆய்வு செய்தபோது, இந்த குழுவினர் வழங்கிய தொடர்ச்சியான முரண்பாடுகளை கொண்ட கருத்துகளினால் சந்தேகமடைந்துள்ளனர்.
இதன் போதே முதலில் சந்தேகம் எழுந்தது. ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் கலப்படம் செய்யப்பட்ட ஆலிவ் எண்ணெயை உலக சந்தையில் விநியோகிக்க வடிவமைக்கப்பட்ட இரு முனை நடவடிக்கையை அவர்கள் விரைவில் கண்டுபிடித்தனர்.
ஸ்பெயினில், குறைந்த வகை எண்ணெய்களை கையகப்படுத்துவதில் தொடர்புடைய ஒரு நிறுவனத்தைப் பயன்படுத்தி, மோசமான தரமுடைய எண்ணெய்களில் மாற்றங்களைச் செய்து, அவற்றின் ஆவணங்களை பொய்யாக்கி விற்கும் நடவடிக்கை ஒன்று இடம்பெறுவதாக இதன் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.