தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ நுழைவாயிலுக்கு அருகில் கார் விபத்துக்குள்ளானதில் 9 வயது சிறுமி உட்பட நால்வர் காயமடைந்தனர்.
இன்று (07) பிற்பகல் கொழும்பு நோக்கிச் சென்ற கார் அதே திசையில் சென்ற வேன் ஒன்றின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கார் மீது மோதிய வேன் சாலையில் கவிழ்ந்ததில் கார் நெடுஞ்சாலையின் பாதுகாப்பு தண்டவாளத்தில் மோதியது.
இந்த விபத்தில் வேனில் இருந்த ஒரு சிறுமி இரண்டு பெண்கள் மற்றும் ஆண் ஒருவரும் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் குறிப்பிட்டனர்.
(Visited 3 times, 1 visits today)