இதயத்திற்கு கவனிப்பு தேவை என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்

உடல் சோர்வடைவதைப் போலவே இதயமும் சோர்வடைகிறது. நாள் முழுவதும் வேலை செய்த பிறகு, உடல் சோர்வைப் போக்க ஓய்வு தேவை.
அதே போல, இதயத்திற்கும் ஓய்வு தேவை. பெரும்பாலான மக்கள் இதயத்திற்கு ஓய்வு கொடுக்கும் வகையில் ஓய்வு எடுப்பதில்லை, இதன் காரணமாக பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது.
சாரதா கேர்-ஹெல்த்சிட்டியின் கார்டியாலஜி மருத்துவர் சுபேந்து மொஹந்தி, இதயத்திற்கு எப்போது ஓய்வு தேவை என்பதை அறிவுறுத்தும் அறிகுறிகள் குறித்த தகவலை அளித்துள்ளார்.
நெஞ்சில் கனம்
மார்பில் லேசான வலி அல்லது இறுக்கம் போன்ற உணர்வு இருந்தால், நீங்கள் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். இது உங்கள் இதயம் சோர்வாக உள்ளது மற்றும் ஓய்வு தேவை என்பதற்கான அறிகுறியாகும்.
சுவாசிப்பதில் சிரமம்
நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது அளவிற்கு அதிகமாக மூச்சு வாங்கினாலோ, அல்லது படுத்திருக்கும் போதோ கூட, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால், உங்கள் இதயம் சோர்வாக இருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் உடனடியாக மருத்துவரிடம் (Health Tips) செல்ல வேண்டும்.
அதீத சோர்வு
காரணமே இல்லாமல் எப்போது சோர்வாக இருந்தாலோ, எந்த ஒரு வேலையும் செய்ய ஆற்றல் இல்லாததை உணர்ந்தாலோ, அது சோர்வான இதயத்தின் அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறியை புறக்கணிக்கப்படக்கூடாது. உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
வியர்வை
எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் இருக்கும் போதே அல்லது சாதாரண வெப்பநிலையில் கூட அளவிற்கு அதிகமாக வியர்த்தால், இந்த அறிகுறியை புறக்கணிக்கக்கூடாது. மாறாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
மயக்கம்
அடிக்கடி தலைசுற்றுவதும், எழுந்து நிற்கும்போது மயக்கம் வருவதும் உங்கள் இதயம் சோர்வாக இருப்பதற்கான அறிகுறியாகும். ஒழுங்கற்ற இதயத்துடிப்பும் சோர்வான இதயத்தின் அறிகுறியாக இருக்கலாம்.
தூங்குவதில் சிக்கல்
உங்களுக்கு தூங்குவதில் சிக்கல் இருந்தால். எனவே இந்த அறிகுறியை நீங்கள் புறக்கணிக்கக்கூடாது. இதயத்திற்கு நிவாரணம் கொடுக்க, மருத்துவரிடம் சென்று மருத்துவரை அணுகவும்.
ஆரோக்கியமான உணவு
இதயம் ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவில், நீங்கள் பச்சை காய்கறிகள், புரதம், நார்ச்சத்து போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். எண்ணெய் மற்றும் காரமான உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.