கிரீன் டீயின் பக்க விளைவுகள்! குடித்தால் ஆபத்து?
அளவுக்கு அதிகமாக கிரீன் டீயை பருகாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். ஏனென்றால், சில நோயாளிகள் க்ரீன் டீயை அதிகம் குடித்தால் அதன் பக்கவிளைவுகள் மிகவும் மோசமாக இருக்கின்றன
க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் சி, வைட்டமின் டி, கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இது உங்கள் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆனால் சில நோயாளிகள் கிரீன் டீ அருந்துவது தீங்கு விளைவிக்கும்.
க்ரீன் டீ குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்?
கிரீன் டீயை அதிகமாக உட்கொள்வதும் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கிரீன் டீயை அதிக அளவில் குடிக்கும்போது, அது கண்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால், கண்கள் பாதிக்கப்படலாம். எனவே, கண் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், கிரீன் டீயை அதிகமாக பருக வேண்டாம்.
கர்ப்ப காலத்தில் க்ரீன் டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். க்ரீன் டீயில் கேடசின் என்ற கலவை உள்ளது, இது கவலையை தரும். மேலும், இது கருவில் உள்ள குழந்தையையும் பாதிக்கும். கர்ப்ப காலத்தில் கிரீன் டீயை குறைந்த அளவில் மட்டுமே பருக வேண்டும்.
இரத்த சோகை பிரச்சனையை அதிகரிக்கும். அதிகப்படியான க்ரீன் டீயை உட்கொள்வது இரும்புச் சத்தை உறிஞ்சும் உடலின் திறனை பாதிக்கிறது. எனவே, கிரீன் டீயை அதிக அளவில் பருக வேண்டாம். உடலில் ரத்தம் பற்றாக்குறை ஏற்படுத்தும் கிரீன் டீ செரிமான அமைப்பைக் கெடுக்கும்