செர்பியா தேர்தல் : உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் செர்பிய எதிர்க்கட்சி பிரமுகர்
செர்பியாவின் பிரதான எதிர்கட்சியின் முன்னணி நபர் ஒருவர், ஒன்பது நாட்கள் உணவு இல்லாமல் உடல்நிலை மோசமடைந்த நிலையில் உள்ளார்.
தொடர்ந்து மருத்துவ ஆலோசனையை மீறி, தேர்தல் மோசடிக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நேற்று உறுதியளித்துள்ளார்.
செர்பிய தேர்தலில், முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி, ஜனாதிபதி வுசிக்கின் செர்பிய முற்போக்கு கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்கவைத்தது. செர்பிய முற்போக்கு கட்சி 47 சதவீத வாக்குகளும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி (வன்முறைக்கு எதிரான செர்பியா) 23.56 சதவீத வாக்குகளும், செர்பிய சோசலிச கட்சி 6.56 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தன.
(Visited 5 times, 1 visits today)