அரசியல் பொழுதுபோக்கு

பிளேட்டை திருப்பி போட்ட அண்ணன்… விஜய்யை கடுமையாக சாடி பரபரப்பை ஏற்படுத்திய சீமான்…

இப்போது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் விஷயம் விஜய் குறித்து சீமான் பேசியது தான். எங்களுக்குள் ஆயிரம் இருந்தாலும் விஜய் என்னுடைய தம்பி.

எனக்கு எதிராகவே விஜய் நடந்து கொண்டாலும் அவரை நான் ஆதரிப்பேன் என்று வீர வசனங்களை சீமான் அக்டோபர் மாதம் பேசியிருந்தார்.

ஆனால் சமீபத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற்றது. இதில் விஜய் பேசுகையில் திராவிடக் கொள்கை மற்றும் தமிழ் தேசியத்தை நாம் பிரித்து பார்க்க போவதில்லை இரண்டுமே நம் கண்கள் போல என்று விஜய் கூறியிருந்தார். அதோடு தமிழ் தேசியம் நம் மண்ணோடு சார்ந்தது என்று கூறியிருந்தார்.

இதை அடுத்து சீமான் சமீபத்திய கூட்டம் ஒன்றில் பேசிய போது இதெல்லாம் கொள்கை இல்லை கூமுட்டை தனம் என்று கடுமையாக சாடி இருக்கிறார். தமிழ் தேசியம் மற்றும் திராவிடம் இரண்டும் எவ்வாறு ஒன்றாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

பொதுவாக விஜய் தன்னுடைய பட விழாக்களில் குட்டி கதை சொல்வது வழக்கமாக வைத்திருக்கிறார். அதை விமர்சிக்கும் படியாக நான் குட்டி கதை சொல்பவன் அல்ல, தம்பி வரலாற்றை கற்பிக்க வந்துள்ளேன். எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் அவர்கள் தங்களுக்கு எதிரி தான்.

இதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது என தமிழ்நாடு கூட்டத்தில் சீமான் ஆவேசமாக பேசியிருக்கிறார். போன மாதம் விஜய்க்கு ஆதரவாக பேசிய சீமான் இப்போது அப்படியே பிளேட்டை திருப்பி போட்டது போல் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இணைந்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்றெல்லாம் சீமான் கூறியிருந்தார். ஆனால் திடீரென விஜய்யை அட்டாக் செய்து சீமான் பேசியிருப்பது அரசியல் களத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

(Visited 5 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக