விரைவில் வியட்நாமுக்கு விஜயம் செய்யும் ரஷ்ய ஜனாதிபதி
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், விரைவில் வியட்நாமுக்கு வருமாறு வியட்நாமியப் பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொண்டதாக வியட்நாமிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இருவரும் அக்டோபர் 17 அன்று பெய்ஜிங்கில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு மன்றத்தின் போது சந்தித்ததாக வியட்நாமிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
வியட்நாமின் ஜனாதிபதி வோ வான் துவாங், “விரைவில்” நாட்டிற்கு விஜயம் செய்யுமாறு புடினை அழைத்துள்ளார்.
மேலும் “புடின் அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்” என்று வியட்நாம் செய்தி நிறுவனம், அறிவித்துள்ளது.
சாத்தியமான வருகைக்கான திகதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை, புடின் துவாங்கை மாஸ்கோவிற்கு அழைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 5 times, 1 visits today)