Site icon Tamil News

பராக் ஒபாமா உள்ளிட்டவர்களுக்கு ரஷ்யா தடை விதிப்பு

வாஷிங்டன் விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடியாக, முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்களுக்கு தமது நாட்டிற்குள் நுழைய தடை விதித்துள்ளதாக ரஷ்யா வெள்ளிக்கிழமை கூறியது.

“பிடென் நிர்வாகத்தால் தொடர்ந்து விதிக்கப்பட்ட ரஷ்ய எதிர்ப்புத் தடைகளுக்கு விடையிறுக்கும் வகையில் 500 அமெரிக்கர்களுக்கு ரஷ்ய கூட்டமைப்பிற்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது.

பட்டியலில் உள்ளவர்களில் ஒபாமாவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளியன்று, உக்ரைன் தாக்குதல் தொடர்பாக ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்குவதற்கான முயற்சிகளை விரிவுபடுத்தியதால், அமெரிக்கா மேலும் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை அதன் தடைகள் தடுப்புப்பட்டியலில் சேர்த்தது.

“ரஷ்யாவிற்கு எதிரான ஒரு விரோதமான நடவடிக்கை கூட பதிலளிக்கப்படாமல் விடப்படாது என்பதை வாஷிங்டன் நீண்ட காலத்திற்கு முன்பே கற்றுக்கொண்டிருக்க வேண்டும்” என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறியது.

பட்டியலிடப்பட்டவர்களில் தொலைக்காட்சி தொகுப்பாளர்களான ஸ்டீபன் கோல்பர்ட், ஜிம்மி கிம்மல் மற்றும் சேத் மேயர்ஸ் ஆகியோர் அடங்குவர்.

சிஎன்என் தொகுப்பாளர் எரின் பர்னெட் மற்றும் எம்எஸ்என்பிசி தொகுப்பாளர்கள் ரேச்சல் மேடோ மற்றும் ஜோ ஸ்கார்பரோ ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.

“காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் சிந்தனைக் குழுக்களின் உறுப்பினர்கள், உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்கும் நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோரை தடுப்புப்பட்டியலில் சேர்த்ததாக ரஷ்யா கூறியது.

Exit mobile version