ஜாம்பவானின் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 218 ரன்னில் சுருண்டது. தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்திருந்தது.
ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்தார்.
இதற்கிடையே, இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆட்டம் அதிரடியாக விளையாடினர்.
ரோகித் சர்மா 154 பந்தில் சதமடித்தார். இந்தத் தொடரில் அவரின் 2வது சதம் இதுவாகும். டெஸ்ட் போட்டிகளில் 12வது சதமாகும்.
சுப்மன் கில்லும் சதமடித்தார். 2வது விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 103 ரன்னில் அவுட்டானார். சுப்மன் கில் 110 ரன்னில் வெளியேறினார்.
இரண்டாம் நாள் இறுதியில் இந்தியா 8 விக்கெட்டுக்கு 473 ரன்கள் குவித்துள்ளது. தற்போது இங்கிலாந்தை விட 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா
இந்நிலையில், இன்று சதமடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் 48வது சதம் இதுவாகும்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 31 சதங்களும், டி20 கிரிக்கெட்டில் 5 சதங்களும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 சதங்களையும் ரோகித் சர்மா அடித்துள்ளார். இதன்மூலம் அதிக சதங்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட் சாதனையை இவர் சமன் செய்தார்.