இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமனம்!

இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய ஒருவருட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
Silverwood தனது ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பாத சூழ்நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக ஜெயசூர்யா பொறுப்பேற்றார்.
அவரது இடைக்கால பதவிக் காலத்தில், சவாலான டி20 தொடருக்குப் பிறகு, ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி வெற்றியீட்டியது.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இலங்கை அணி தற்போது 1-0 என முன்னிலையில் உள்ளது, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 21 times, 1 visits today)