வட அமெரிக்கா

அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் கல்லூரி வளாகத்தினுள் சடலமாக மீட்பு!

அமெரிக்காவில் டிப்பேகானோ கவுண்டியில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் கணினி மென்பொருள் படிப்பை பயின்று வந்துள்ளார் இந்திய மாணவர் நீல் ஆச்சார்யா. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார்

இதுகுறித்து அவரது தயார் கவுரி ஆச்சார்யா , தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில் ,’எங்கள் மகன் நீல் ஆச்சார்யா கடந்த 28ம் திகதி முதல் காணவில்லை, அவர் அமெரிக்காவில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவரை கடைசியாக தனியார் கால்டாக்சி டிரைவர் ஒருவர் பார்த்துள்ளார். டிரைவர் எனது மகனை பர்டூ பல்கலைக்கழகத்தில் இறக்கிவிட்டுள்ளார். அதன் பிறகு மகனை பற்றிய எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் எங்களுக்கு உதவவும்’என பதிவிட்டு இருந்தார்

இதற்கு சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம் பதில் அளித்து இருந்தது. அதில், ‘இந்திய தூதரகம் பர்டூ பல்கலைக்கழக அதிகாரிகளுடனும், நீல் ஆச்சார்யாவின் குடும்பத்தினருடனும் தொடர்பில் இருக்கிறோம் . தூதரகம் மூலம் சாத்தியமான அனைத்து உதவியையும் செய்ய தயார் என உறுதியளித்தது.

See also  போரை நிறுத்துவதற்காகவே கடவுள் எனது உயிரை காப்பாற்றியுள்ளார் - ட்ரம்ப்!

Indian student kept in captivity for 3 months, beaten with PVC pipe, metal  rods in US, rescued | Mint

இந்த நிலையில், டிப்பேகானோ கவுண்டி அதிகாரி தகவலின் படி, கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியில் இறந்த இளைஞர் உடல் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்த தகவல் வந்தவுடன், நேரடியாக சென்று பார்க்கையில், அந்த உடல் பர்டூ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த கல்லூரி மாணவர் நீல் ஆச்சார்யா என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனை கல்லூரி நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளது. அதில், எங்கள் மாணவர்களில் ஒருவரான நீல் ஆச்சார்யா காலமானார் என்பதை நாங்கள் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நீல் ஆச்சார்யா இழப்பால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

நீல் ஆச்சார்யா எப்படி அங்கு சென்றார், எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content