வட அமெரிக்கா

17 வயது மாணவருடன் தாகாத உறவு… ஆசிரியருக்கு 58 நாட்கள் சிறை

அமெரிக்காவில் ஆசிரியை ஒருவர் மாணவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதால் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஓக்லாவின் வெஸ்ட்வில்லியைச் சேர்ந்தவர் லியா குயின் (44). இவர் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.ஜென்டரி இடைநிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிய இவர் மீது பாலியல் குற்றம்சாட்டப்பட்டது.

2010ஆம் ஆண்டில் 17 வயது உயர்நிலைப் பள்ளி மாணவருடன் லியா குயின் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக பாதிக்கப்பட்ட மாணவரே புகார் கூறியிருந்தார்.மேலும், குயினின் முன்னாள் கணவர் மற்றும் மாணவரின் பெற்றோர், முன்னாள் பள்ளி ஆசிரியர் என பலரும் மாணவரின் விவரங்களை உறுதிப்படுத்தினர்.

இந்த நிலையில் பென்டன் கவுண்டி சிறையில் 58 நாட்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.இதற்கிடையில், மீண்டும் ஒருபோதும் ஆசிரியராக பணி அமர்த்தப்படப்போவதில்லை என்பதை லியா குயின் ஒப்புக்கொண்டார்.

(Visited 8 times, 1 visits today)
See also  அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்திய டோனால்ட் டிரம்பின் ராட்சத நிர்வாண சிலை அகற்றம்
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content