பிரான்ஸ் தலைநகரில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்ட அகதிகள்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்த அகதிகள் பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை இந்த வெளியேற்றம் இடம்பெற்றுள்ளது. Ourcq கால்வாய் அருகே சிறிய கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்தனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அங்கு வருகை தந்த பொலிஸார் மற்றும் தன்னார்வலர்கள் அகதிகளை அங்கிருந்து பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர்.
மொத்தமாக 136 பேர் வெளியேற்றப்படிருந்தனர். அவர்களில் 90 பேர் இல் து பிரான்சுக்குள் உள்ள பல்வேறு அகதிகள் பாதுகாப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
46 பேர் இல் து பிரான்சுக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர். இது இவ்வருடத்தில் பரிசில் இடம்பெறும் 31 ஆவது வெளியேற்றமாகும்.
(Visited 10 times, 1 visits today)