முடிவடைந்த ஜெலென்ஸ்கியின் பதவிக்காலம் : ரஷ்யாவும் உக்ரைனும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தசட்டத் தடை ! புடின் அதிரடி
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என்றும், ரஷ்யாவும் உக்ரைனும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினால் அது சட்டத் தடையாக இருக்கும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் மூன்றாம் ஆண்டில் உக்ரைன் இராணுவச் சட்டத்தின் கீழ், Zelenskiy தனது ஐந்தாண்டு பதவிக்காலம் இந்த வாரம் முடிவடைந்த போதிலும் தேர்தலை எதிர்கொள்ளவில்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
புடின் தற்போதைய போர்க்களக் கோடுகளை அங்கீகரிக்கும் பேச்சுவார்த்தை மூலம் போர்நிறுத்தத்துடன் உக்ரைனில் போரை நிறுத்தத் தயாராக இருக்கிறார், நான்கு ரஷ்ய ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது,
ஆனால் கெய்வ் மற்றும் மேற்கு நாடுகள் பதிலளிக்கவில்லை என்றால் போராட தயாராக உள்ளது எனவும் ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துளளார்.
பெலாரஸ் விஜயத்தின் போது ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் கூட்டத்தில், புடின் ஜெலென்ஸ்கியின் நிலை சிக்கலானது என்று கூறியுள்ளார்.
“ஆனால் யாருடன் பேச்சுவார்த்தை நடத்துவது? நிச்சயமாக பதவியில் இருக்கும் அரச தலைவரின் சட்டபூர்வமான தன்மை முடிந்துவிட்டது என்பதை நாங்கள் உணர்கிறோம்,” என்று அவர் கூறியுள்ளார்.
உக்ரேனிய அதிகாரிகள், ஜெலென்ஸ்கிக்கு போரின் போது சட்டபூர்வமான தன்மை இல்லை என்ற எந்த கருத்தையும் நிராகரிக்கின்றனர்.
உக்ரைன் பாராளுமன்றத்தின் சபாநாயகர் Ruslan Stefanchuk, இந்த வாரம் ஜனாதிபதியின் சட்டபூர்வமான தன்மையை கேள்வி எழுப்பும் எவரும் தவறான தகவல்களை பரப்பும் “உக்ரைனின் எதிரி” என்று கூறினார்.