ஐரோப்பா

டெய்லர் சுவிஃப்ட் இசைநிகழ்ச்சியில் பிறந்தநாளைக் கொண்டாடிய இளவரசர் வில்லியம்

புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகி டெய்லர் சுவிஃப்ட் லண்டனில் தமது இசைநிகழ்ச்சியைப் நடத்தி வருகிறார்.

தொடக்க நாளான ஜூன் 21ஆம் திகதி வெம்ப்லி அரங்கில் சுவிஃப்ட் படைத்த இசைநிகழ்ச்சியில் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் தமது 42வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

பாடகி சுவிஃப்டுடன் தாமும் தமது பிள்ளைகளான இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லட்டும் மேடையின் பின்புறம் எடுத்துக்கொண்ட படத்தை இளவரசர் வில்லியம் ஜூன் 22ஆம் திகதி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

“சிறந்த மாலைப் பொழுதுக்கு டெய்லர் சுவிஃப்ட்டுக்கு நன்றி,” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

பாடகி சுவிஃப்ட்டும் அம்மூவருடனும் தமது காதலரும் அமெரிக்கக் காற்பந்து விளையாட்டாளருமான டிரவிஸ் கெல்சுடனும் எடுத்துக்கொண்ட படத்தைப் பதிவிட்டுள்ளார்.

சுவிஃப்ட்டும் அவரது காதலரும் இணைந்து காணப்படும் படம் சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.

பிரிட்டிஷ் அரியணைக்கு அடுத்த வாரிசான இளவரசர் வில்லியம் ‘ஷேக் இட் ஆஃப்’ பாடலுக்கு உற்சாகத்துடன் நடனமாடுவதைக் காட்டும் காணொளி இணையத்தில் அதிகம் பரவிவருகிறது.

வெம்ப்லி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 90,000 ரசிகர்கள் திரண்டதாகக் கூறப்பட்டது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content