பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : பிரித்தானியா முழுவதும் 20 துப்பாக்கிகள் உள்பட மில்லியன் கணக்கில் போதைப்பொருள் மீட்பு!
பிரித்தானியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், £130 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா, ஒரு மில்லியன் மதிப்புள்ள கொக்கோய்ன், மற்றும் 20 துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை பிரித்தானிய சட்ட அமலாக்கத் துறை வரலாற்றில் மிக முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் மேற்கொள்ளப்பட் சோதனை நடவடிக்கையின்போது, 20 துப்பாக்கிகள், £1 மில்லியன் மதிப்புள்ள கொக்கோய்ன் போதைப்பொருள், 6 இலட்சத்து 36 ஆயிரம் பவுண்ட் ரொக்கம் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஆபரேஷன் மில்லே என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஆயிரம் பேரை கைது செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் பொலிஸ் படைகள் மற்றும் பிராந்திய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவுகளுடன் (ROCU), தேசிய குற்றவியல் முகமை மற்றும் குடிவரவு அமலாக்க அதிகாரிகளும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.