தாய்லாந்தில் 270 இலங்கையர்களுக்கு குருத்துவப் பயிற்சி
இந்நாட்டில் சியாம் மகா நிக்காயா ஸ்தாபிக்கப்பட்டு 270 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, 270 இலங்கையர்கள் தாய்லாந்திற்குச் சென்று தற்காலிக குருத்துவப் பயிற்சிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் வியாங்மாய் மாகாணத்தின் மே ஏய் நகரின் தம்போன் கிராமத்தில் அமைந்துள்ள வாட் பா சோம்டெட் பிரக்னா வஜிரோடோ ஆலயம் இதற்கு நிதியுதவி வழங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு தற்காலிக துறவு அளிக்கப்பட்டு, தர்ம ஞானம் வழங்கப்படும்.
இந்தப் பயணத்தில் இணைந்து கொள்ளும் குழுவில் இருந்து 50 பேருக்கான பூர்வாங்க பயிற்சி நிகழ்ச்சி நேற்று கண்டி நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்தில் இடம்பெற்றது.
நாமல்தெனி தம்மசுமன தேரரின் முயற்சியின் கீழ் இந்த வேலைத்திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் இணையும் இலங்கையர்கள் குழு ஜூலை 25 ஆம் திகதி தாய்லாந்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.