Site icon Tamil News

இலங்கையில் விசா நிறுத்தம் – கட்டுநாயக்க விமான நிலையங்களில் நீண்ட வரிசை

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏனையோருக்கு இணையத்தில் வீசா வழங்கப்படாமையால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் On Arrivel Visa பெறுவதற்கு நீண்ட வரிசைகள் படிப்படியாக உருவாகி வருகின்றன.

கடந்த 2ஆம் திகதியன்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கமைய, இலங்கைக்குள் நுழைவதற்கான விசா வழங்குவதில் இருந்து VFS குளோபல் நிறுவனத்தை நீக்கி, பழைய முறைப்படி விமான நிலையத்தில் விசா வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனினும் அரசாங்கமும் குடிவரவு குடியகழ்வு திணைக்களமும் பழைய முறைப்படி ஒன்லைன் மூலம் விசா வழங்க ஆரம்பிக்காததால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா பெற நீண்ட வரிசைகள் உருவாகி வருகின்றன.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, ஒன்லைன் முறை மூலம் விசா வழங்குவது நிறுத்தப்பட்டது, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து On Arrivel Visa பெறுவதே ஒரே தீர்வாகும்.

இலங்கையில் இந்த ஓகஸ்ட் மாதம் முதல் சுற்றுலா பருவம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கண்டி எசல பெரஹெரா திருவிழாவை காண கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அதிகளவான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகின்றனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அதிகளவான விமானங்கள் ஒரே நேரத்தில் வரும் போது, ​​கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா பெறுவதற்கு நீண்ட வரிசையில் எப்போதும் காணப்படுவதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

Exit mobile version