இஸ்ரேலிய பிரதமர் பொய்களை பரப்பி வருவதாக பாலஸ்தீன் குற்றச்சாட்டு!
காசா நகரில் உள்ள மருத்துவமனையில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பொய்களைப் பரப்பி வருவதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான பாலஸ்தீன தூதர் ரியாட் மன்சூர் குற்றம் சாட்டியுள்ளார்.
குறித்த தாக்குதலில் 500 பேர் வரையில் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயமுற்றுள்ளனர். அத்துடன் உலக நாடுகள் பல கண்டனம் வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், குண்டுவெடிப்பு இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலின் விளைவு என்று ஹமாஸ் கூறியது. இஸ்ரேலின் இராணுவம் குற்றச்சாட்டுகளை மறுத்தது. மற்றும் பாலஸ்தீனிய போராளிகளின் தோல்வியுற்ற ஏவுகணை தாக்குதலில் மருத்துவமனை தாக்கப்பட்டதாகக் கூறியது.
நெதன்யாகு இந்த கூற்றை ஆதரித்ததுடன், தாக்குதலுக்கு இஸ்லாமிய ஜிஹாத் போராளிகளே காரணம் எனக் குற்றம் சாட்டினார்.
(Visited 4 times, 1 visits today)