நீதிமன்றத் தீர்ப்பை மீறி 24,000 பிரித்தானிய புகலிடக் கோரிக்கையாளர்கள் ருவாண்டாவுக்கு அனுப்பப்படலாம்?
ருவாண்டாவிற்கு குடியேற்றவாசிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் பிரித்தானியாவின் திட்டம் சட்டவிரோதமானது என பிரித்தானிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியா மற்றும் ருவாண்டா திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக புகலிடக் கோரிக்கையாளர்கள் அவர்களின் சொந்த நாடுகளிற்கே திருப்பி அனுப்பப்படுவதில் ஆபத்துள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே ருவாண்டா திட்டத்தில் உள்ள குறைபாடுகள் திருத்தப்படும் வரை புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்புவது சட்டவிரோதமானது எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,உலகின் மூன்றில் ஒரு பங்கு நாடுகளில் இருந்து 24,000 க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்காலத்தில் இங்கிலாந்து உள்துறை அலுவலகத்தால் ருவாண்டாவிற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகவல் சுதந்திரக் கோரிக்கையின் கீழ் பெறப்பட்ட உள்துறை அலுவலகத் தரவுகளின் படி ஜனவரி 2021 மற்றும் மார்ச் 2023 க்கு இடையில், 24,083 புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பலவந்தமாக அகற்றப்படுவதற்கு பரிசீலிக்கப்படுவதாக எச்சரிக்கும் கடிதங்கள் வழங்கப்பட்டதாகக் காட்டுகிறது.
மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த ஏற்பாட்டை சட்டவிரோதமானது என்று கண்டறிந்தாலும், இங்கிலாந்து மற்றும் ருவாண்டா அரசாங்கங்கள் இருவரும் அதை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாகக் கூறுகின்றன.