செய்தி தமிழ்நாடு

நமது கொடி பறக்கும், இனி தமிழ் நாடு சிறக்கும் – நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியது நாம் அறிந்ததே.

அவர் ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்ட படங்களை நடித்து முடித்துவிட்டு இனி முழு நேரம் அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

மேலும் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அஅறிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய் புதிய நேற்று அறிக்கை ஒன்றை வெவெளியிட்டார்.

அதில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது பெரும் வரம்.

அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள் தான் 2024 ஆகஸ்ட் 22.

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள்.

தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு. கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன்.

See also  முகத்தை முழுமையாக மூட தடை- மீறினால் அபாராதம்

நாளை (இன்று 22) முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்” என்று அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்ந அறிக்கையின்படி இன்று (22) உறுதிமொழி எடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை அதன் தலைவா் விஜய் அறிமுகம் செய்தார் .

இதன்படி மக்கள் அனைவரும் ஆவலாக எதிர்ப்பார்த்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிகொடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content