ஒடிசா ரயில் விபத்து : தமிழகத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என உதயநிதி தெரிவிப்பு!
ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்திருந்தது. அத்துடன் 8 பேர் காணாமல் போயிருந்த நிலையில் அவர்கள் குறித்த தகவல்களை மக்கள் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விபத்தில் சிக்கியவர்களை மீப்பதற்காக அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், மற்றும் சிவசங்கர் உள்ளிட்ட குழுவினர் ஒடிசா சென்றிருந்த நிலையில், தற்போது தமிழகம் திரும்பியுள்ளனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என்றார்.
8 பேர் குறித்த தகவல் இல்லாமல் இருந்த நிலையில் 3 பேர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. மற்ற 5 பேரும் நலமுடன் உள்ளதாக அவர்களுடன் உடன் பயணித்த நபர்கள் தகவல் கொடுத்துள்ளனர் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.