பூமியின் துருவங்களை ஆராய காலநிலை மாற்ற செயற்கைக்கோளை ஏவிய நாசா
முதல் முறையாக பூமியின் துருவங்களில் இருந்து வெளியேறும் வெப்பத்தை அளவிடுவதன் மூலம் காலநிலை மாற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஒரு சிறிய நாசா செயற்கைக்கோள் நியூசிலாந்தில் இருந்து ஏவப்பட்டது.
“இது ஒரு புதிய முயற்சி,துருவங்களில் என்ன நடக்கிறது, காலநிலையில் என்ன நடக்கிறது என்பதை மாதிரியாகக் காட்டும் நமது திறனை மேம்படுத்தும்” என்று நாசாவின் புவி அறிவியல் ஆராய்ச்சி இயக்குனர் கேரன் செயின்ட் ஜெர்மைன் சமீபத்திய செய்தி மாநாட்டில் தெரிவித்தார்.
செருப்பு பெட்டியின் அளவுள்ள இந்த செயற்கைக்கோள், நியூசிலாந்தின் வடக்கே உள்ள மஹியாவில் இருந்து ராக்கெட் லேப் என்ற நிறுவனத்தால் கட்டப்பட்ட எலக்ட்ரான் ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.
துருவங்கள் விண்வெளியில் வெளியிடும் வெப்பத்தை நேரடியாக அளக்க, அவை ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக்கிற்கு மேலே அகச்சிவப்பு அளவீடுகளை எடுக்க உதவும்.
“இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது வெப்பமண்டலப் பகுதிகளில் பெறப்படும் அதிகப்படியான வெப்பத்தை சமப்படுத்தவும், பூமியின் வெப்பநிலையை உண்மையில் கட்டுப்படுத்தவும் உதவுகிறது” என்று மேடிசனில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஒரு மிஷன் ஆராய்ச்சியாளர் டிரிஸ்டன் எல்’ஈகுயர் தெரிவித்தார்.