ஐரோப்பா

பிரான்ஸில் நான் ஈ திரைப்பட பாணியில் நடந்த சம்பவம் – ஐவர் படுகாயம்

பிரான்ஸில் நான் ஈ திரைப்படத்தில் வருவது போல், நடந்த சம்பவத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த வீதி விபத்து ஏற்பட தேனி ஒன்று காரணமாக அமைந்துள்ளது. விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

Avignon நகரை ஊடறுக்கும் A7 நெடுஞ்சாலையில் இவ்விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

வீதியில் வேகமாக பயணித்த வாகனம் ஒன்றுக்குள் தேனீ ஒன்று நுழைந்து சாரதியை கொட்டியுள்ளது.

இதனால் நிலை தடுமாறிய சாரதி, எதிரே சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றுடன் மோதியுள்ளார். இவ்விபத்தில் 9 வயது பாடசாலை சென்ற சிறுமி ஒருவர் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.

தீயணைப்பு படையினர் தலையிட்டு காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content