ஐரோப்பா

பிரித்தானியாவில் மாயமான கார் – கண்டுபிடித்துக் கொடுத்த கூகுள்

பிரித்தானியாவில் திருடப்பட்ட காரை மீட்க கூகுள் செயலி உதவிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பர்மிங்காமைச் சேர்ந்த 23 வயதான ஜே ராபின்சன், காலையில் வேலை நிமித்தமாக வீட்டில் இருந்து வெளியே கிளம்ப வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரை எடுக்க வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது இரண்டு கார்களும் திருடப்பட்டிருந்தன.

சீட் ஸ்போர்ட் கார் மற்றும் போக்ஸ்வேகன் கோல்ஃப் மாடல் கார் ஆகிய அவரது இரண்டு கார்களையும் வீட்டிற்குள் புகுந்து அவற்றின் சாவியை எடுத்து திருடி சென்றுள்ளனர். இந்த நிலையில், அவரது சீட் மாடல் காரின் புகைப்படம் ஒன்றை தற்செயலாக ஸ்னாப்சாட் தளத்தில் ஜேயின் நண்பர் ஜேமி கண்டுள்ளார்.

இதற்கிடையில் காரைத் திருடிய நபரிடமிருந்து 2000 பவுண்ட்டுகள் கேட்டு குறுஞ்செய்தி வந்துள்ளது. காவலர்கள் நடவடிக்கை திருப்தி தராத நிலையில் இளைஞர்கள் இருவரே காரைத் தேட தொடங்கியிருக்கின்றனர்.

ஜேமி, அந்தப் புகைப்படத்தில் கார் நிறுத்தப்பட்டிருந்த கட்டிடத்தைக் படங்களை உள்ளிட்டு தேடும் செயலி வழியாக தேடியதில் அந்தக் கட்டிடத்தைக் கண்டறிந்துள்ளனர். கட்டிடத்தின் அருகே இருந்த குப்பை தொட்டியில் பொறிக்கப்பட்டிருந்த வீட்டுத் தோட்டத்தின் அந்த இடத்தைக் கண்டறிந்துள்ளனர்.

கூகுள் எர்த் செயலி தெருவைச் சரியாகக் கண்டறிய உதவியிருக்கிறது. இந்த செயலி உலகின் வரைப்படத்தை செயற்கைக்கோள் படங்களாகக் காட்டக் கூடியது. உடனே காவலர்களுக்கு இதனை தெரியப்படுத்த அந்தக் கார் அங்கிருந்து மீட்கப்பட்டது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content