பதற்றத்திற்கும் மத்தியில் ஈரானின் புதிய அதிபராக தேர்வு செயப்பட்டுள்ள முகமது முகபர்
ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா அருகே பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.
அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அவர் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஒன்பது பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது உடல்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஈரான் நாட்டின் புதிய அதிபராகிறார் முகமது முக்பர். ஈரான் நாட்டின் புதிய காபந்து அதிபராக துணை அதிபர் முகமது முக்பர் விரைவில் பொறுப்பேற்க உள்ளர்
ஈரான் அரசியல் சாசனத்தின்படி 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதையடுத்து புதிய அதிபராக முகமது முக்பர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.