செய்தி விளையாட்டு

ஸ்ரேயாஸ் ஐயரை தொடர்ந்து மிட்செல் ஸ்டார்க்கும் கேகேஆர் மீது பரபர குற்றச்சாட்டு

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு ஏலத்திற்கு இன்னும் சில நாட்களில் உள்ள நிலையில் எந்த அணி எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளப் போகிறது என்பதை கடந்த 31ஆம் திகதி அறிவித்தது.

இந்த சூழலில் நடப்பு சாம்பியன் ஆன கே கே ஆர் அணி கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஸ்டார்க் ஆகியோரை அதிரடியாக நீக்கி இருக்கிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கே கே ஆர் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க், கே கே ஆர் அணி இதுவரை தம்மை தொடர்பு கொண்டு எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.

பிரான்ச்சைஸ் கிரிக்கெட் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று ஸ்டார்க் கூறி இருந்தார்.

கடந்த மினி ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க் 24 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஸ்டார்க் ஏலம் சென்றார்.

இதேபோன்று கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் கே கே ஆர் அணிமீது குற்றச்சாட்டு இருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள கேகேஆர் அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர், ஸ்டார்க் இன் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய அவர்,முதலில் நாங்கள் எப்போதுமே வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்வோம். இதுதான் எங்களுடைய அணுகுமுறையாக இருக்கின்றது.

எங்கள் அணி வீரர்களிடம் நாங்கள் எப்போதுமே ஒரு நல்ல தொடர்பில் இருக்கின்றோம். நாங்கள் தக்க வைத்துக் கொண்ட வீரர்களிடம் மட்டும் பேசவில்லை.

தக்கவைக்கப்படாத வீரர்களிடமும் பேசி நாங்கள் எங்களுடைய கருத்தை தெரிவித்து இருக்கின்றோம்.

ஆனால் சிலர் எங்களைப் பற்றி தவறான கருத்துக்களை கூறி வருகிறார்கள். பெரும்பாலான நபர்கள் எங்களுடைய நிலைமையை புரிந்து கொண்டிருக்கிறார்கள் என நம்புகிறேன் என்று வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார்.

கே கே ஆர் அணி ஏலத்திற்கு முன்பே ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

இதில் அதிகபட்சமாக இந்திய வீரர் ரிங்கு சிங்கிற்கு 13 கோடி ரூபாயும் சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி, ஆண்டிரு ரசிலுக்கு தலா 12 கோடி ரூபாயும், ‘ஹர்ஷித்ரான மற்றும் ராமந்திப் சிங்கிற்கு தலா 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

இதில் ரிங்கு சிங் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி