இலங்கை

யாழில் அரை நிர்வாணமாக மது போதையில் அரச பணியாளர் செய்த மோசமான செயல்!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் அரை நிர்வாணமாக மது போதையில் நின்ற அரச பணியாளரொருவர் பொது இடத்தில் அரச ஊழியரொருவரை கொட்டனினால் தாக்கி அட்டகாசம் புரிந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

ஊர்காவற்துறையில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த பாதையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கடல் பாதையில் கடமை நேரத்தில் மது போதையில் நின்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) பாதை பணியாளர் ஒருவர் அரை நிர்வாணமாக மது போதையில் நின்று பயணத்தில் இருந்த அரச ஊழியர்கள், பொதுமக்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன் அரச ஊழியர்களுடன் தகாத வார்த்தைகளால் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் கொட்டனினால் ஊழியரை தாக்கியுள்ளார்.

இதன்போது பிரதேச செயலகம் மற்றும் நீதிமன்றங்களில் பணியாற்றும் பெண்கள் உட்பட பலரும் பாதையில் பயணத்தில் ஈடுபட்டபோது குறித்த சம்பவம் இடம்பெற்றமை பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயணிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் மது போதையில் இருந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை அரச பணியாளர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 9 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content