விளையாட்டு

பலோன் டி’ஓர் விருதை 8வது முறை வென்ற மெஸ்சி

கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி ‘ஓர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது. 1956-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் 60 பேர் (30 ஆண் மற்றும் 30 பெண்)  இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பலோன் டி’ஓர் விருதை அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சி 8-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த உலக கோப்பையை அர்ஜென்டினா வெல்வதில் முக்கிய பங்கு வகித்த மெஸ்சி, 7 கோல் அடித்ததுடன், 4 ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று அசத்தினார்.

மெஸ்சி 2009, 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் வென்று அசத்தியிருந்தார். ஏற்கனவே, இந்த விருதுக்கு அதிக முறை பரிந்துரைக்கப்பட்ட வீரர் என்ற சாதனையையும் மெஸ்சி படைத்திருந்தார்.

பெண்களுக்கான பலோன் டி’ஓர் விருதை உலக கோப்பை வென்ற ஸ்பெயின் நட்சத்திர வீராங்கனை அடானா பொன்மதி கைப்பற்றினார்.

(Visited 2 times, 1 visits today)

Avatar

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page