தொடர்ந்து 4வது நாள் ஆட்டமும் ரத்து – அதிருப்தியில் ரசிகர்கள்

நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஷகித் விஜய் சிங் பதிக் ஸ்டேடியத்தில் 9ந் தேதி தொடங்க இருந்தது.
முந்தைய நாள் பெய்த பலத்த மழையால் ஆடுகளம் விளையாடுவதற்கு உகந்த வகையில் இல்லாததால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது.
2வது நாள் ஆட்டத்தில் மழை பெய்யாவிட்டாலும் ஈரப்பதமான மைதானம் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்றைய 3வது நாளில் மழை பெய்ததால் ஆட்டமும் டாஸ் கூட போடமுடியாமல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மழை காரணமாக 4வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டதாக நடுவர்கள் தெரிவித்தனர்.
(Visited 38 times, 1 visits today)