ஜெர்மனியில் மக்கள் தொகையில் பாரிய அதிகரிப்பு – நெருக்கடியில் அரசாங்கம்
ஜெர்மனியில் சனத்தொகை பாரிய அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, ஜெர்மனியில் தற்போது 84 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜெர்மன் நாட்டில் ஓய்வு ஊதியத்தை பெறும் மக்களின் தொகையானது 22.1 மில்லியனாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது 2023 ஆம் ஆண்டு இவ்வாறு ஓய்வு ஊதியம் பெறுகின்றவர்களின் எண்ணிக்கையானது 0.6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டை 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது 121000 பேர் மேலதிக ஓய்வு ஊதியம் பெறுகின்றவர்களாக கணக்கிடப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் ஜெர்மன் அரசாங்கமானது வருடம் ஒன்றுக்கு ஓய்வுஊதியத்துக்காக செலவிடப்படும் தொகையானது 381 பில்லியன் யுரோக்களாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் எதிர்வரும் காலங்களில் இவ்வாறு ஓய்வு ஊதியம் பெறுகின்றவர்களின் எண்ணிக்கையானது கணிசமாக அதிகரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனை கருத்தில் கொண்டு அரசாங்கமானது பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வயோதிப நிலைக்கு செல்லும் மக்கள் தொகையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தொழிலாளர் பற்றாக்குறையுடன் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.