ஜெர்மனியில் நடந்த பாரிய மோசடி அம்பலம் – அதிர்ச்சி தகவல் வெளியானது
ஜெர்மனியில் கொவிட் காலங்களில் பரிசோதணை நிலையங்கள் அமைத்து செயற்பட்டு வந்தவர்கள் பாரிய மோசடிகளை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் கொவிட் காலங்களில் பரிசோதணை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டதாகவும்,
இந்த நிலையங்களில் பணியாற்றியவர்கள் பயிற்றப்பட்டவர்களாக இருக்கவில்லை என்றும்,
மேலும் இவர்கள் மோசடியான ரீதியில் அரசாங்கத்திடம் இருந்து பணத்தை பெறுவதற்கு புதிய பல பரிசோதணை நிறுவனங்களை நடத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வகையான மோசடியினால் ஜெர்மன் அரசாங்கத்துக்கு 1.2 பில்லியன் யுரோக்கள் நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது இந்த பணத்தை இவர்கள் பரிசோதணையை மேற்கொள்ளாமலே தாங்கள் பரிசோதணை மேற்கொண்டதாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பணத்தை பெற்றுக்கொண்டதாக தெரியவந்துள்ளது.
ஜெர்மன் அரசாங்கமானது கொவிட் காலத்தில் 17.6 பில்லியன் யுரோக்களை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பல குழு நிலை குற்றவாளிகள் இவ்வகையான மோசடிகளில் ஈடுப்பட்டதாகவும்,
ஏற்கனவே அரசாங்கமானது இவ்வாறு மோசடிகளில் ஈடுப்பட்டவர்களை கண்டு பிடித்து சிலரிடம் பணத்தை மீள பெற்றுக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.