Site icon Tamil News

இந்தியப் படைகளை வெளியேற்ற விரும்பும் மாலத்தீவு ஜனாதிபதி

மாலத்தீவில் நடந்த அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்றார். அவர் மாலத்தீவின் 8-வது அதிபராக நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டார். இதில் இந்தியா சார்பில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு கலந்து கொண்டார்.

அதிபர் முகமது முய்சு தனது தேர்தல் பிரசாரத்தின் போது தான் வெற்றி பெற்றால் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தை வெளியேற்றுவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

இந்த நிலையில் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று இந்தியாவிடம் அதிபர் முகமது முய்சு முறைப்படி கேட்டுக் கொண்டார்.

இதை அவர் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜுவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாலத்தீவு அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் மாலத்தீவில் இருந்து தனது ராணுவத்தை இந்தியா திரும்ப பெறுமாறு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக கேட்டுக் கொண்டது என்று தெரிவித்துள்ளது.

Exit mobile version